Sri Kurangani Muthumalai Amman temple
குரங்கணி முத்துமாலை அம்மன் வரலாறு : தூத்துக்குடி மாவட்டத்தில் பழமையானதாகவும், ராமாயண காலத்தோடு தொடர்புடையதாகவும் விளங்குகிறது குரங்கணி முத்துமாலையம்மன் திருக்கோவில். ராமாயண காலத்தில் சீதாதேவியை, ராவணன் சிறைபிடித்துச் சென்றான். சீதாதேவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட ராமனுக்கு வானரங்கள் உதவின. இலங்கைக்குச் செல்ல ராமபிரான் தன் வானரச் சேனையை அணிவகுத்து நிற்கச் செய்த இடம் இது என்று கூறப்படுகிறது. குரங்குகள் அணிவகுத்து நின்றதால் இவ்வூர் ‘குரங்கணி’ என பெயர் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது. ராவணன், சீதாதேவியை கடத்திச் சென்றபோது, ராமனுக்கு அடையாளம் காட்ட தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையை கழற்றி வீசினாள், சீதாதேவி. புஷ்பக விமானத்தில் இருந்து வீசப்பட்ட முத்து மாலை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குரங்கணியில் விழுந்தது. தரையில் விழுந்த முத்துமாலை ஜோதியாக ஒளி வீசியது. அப்போது அந்த வழியாக வந்த பனையடியான் என்பவர், முத்து மாலையின் ஒளி வீச்சை காண முடியாமல் கண்கள் கூச, அருகில் கிடந்த மண் சட்டியை எடுத்து அந்த முத்துமாலையை மூடினார். பின்பு ஊர் மக்கள் கூடி முத்து மாலை கிடந்த இடத்தில் சீதாதேவியின் பெயர...